தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒமேகாவின் ஒலிம்பிக் கடிகாரம்

0 98

பிரான்ஸில் அடுத்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ சொகுசு கடிகாரத்தை உருவாக்க ஒமேகா பரிஸ் 2024 உடன் கூட்டு சேர்ந்துள்ளது.  இதன் விலை £8,000 ($10,100/€9,200.

1932 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒமேகா முதன் முதலாக  அதிகாரப்பூர்வ நேரக் கண்காணிப்பாளராக இணைந்தது.  

2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒமேகா அனுசரணையாளராகச் சேர்ந்தது.

அனைத்து ஒலிம்பிக் நிகழ்வுகளுக்கும் நேரக் கண்காணிப்புடன், ஒமேகா போட்டியாளர்களை மோஷன் சென்சார்கள் மூலம் சித்தப்படுத்துகிறது, அவை நேரலை வேகம் மற்றும் ஒப்பீட்டுத் தரவு போன்ற உடனடி தகவல்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு நிகழ்வு நடைபெறும் இடத்திலும் வைக்கப்படும் ஆண்டெனாக்களுடன் தொடர்பு கொள்கின்றன. ஒமேகாவின் அனுசரணை 2032 வரை நீடிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.