தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒக்டோபர் 4, பிராந்திய சுனாமி ஒத்திகை

0 124

திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களில்  கரையோர மக்களினதும்  பாடசாலை  மாணவர்களினதும்  தயார்நிலையை பரிசோதிப்பதற்காக பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சியொன்று 2023 ஒக்டோபர் 04 ஆம் திகதி புதன்கிழமை  இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று (03) அறிவித்தார்.

அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இலங்கையினுள் தாபிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரையான சுனாமி ஆரம்ப ஆபத்து நிலையை எதிர்வுகூறும்  பொறிமுறையை மதிப்பீடு செய்யும் நோக்கத்தில் இந்தப் பயிற்சி இடம்பெறுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

கரையோர மாவட்டங்களை பிரதிநித்துவம் செய்கின்ற பாராளுமன்ற  உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து  பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும் அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் கோரிக்கையொன்று  விடு்க்கப்பட்டு்ள்ளதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.  பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பின் போதே,  மேற்கண்டவாறு அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.