தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எரிபொருட்களின் புதிய விலைகள்

0 87

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

குறித்த விலைக் குறைப்புக்கு அமைய,

பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 328 இலிருந்து ரூ. 20 இனால் அதிகரிப்பு
பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 365 இலிருந்து ரூ. 10 இனால் அதிகரிப்பு
ஒட்டோ டீசல்: ரூ. 308 இலிருந்து ரூ. 2 இனால் குறைப்பு
சுப்பர் டீசல்: ரூ. 346 இலிருந்து ரூ. 12 இனால் அதிகரிப்பு
மண்ணெண்ணெய்: ரூ. 236 இலிருந்து ரூ. 10 இனால் குறைப்பு
அந்த வகையில் புதிய எரிபொருட்களின் புதிய விலைகள்,

பெற்றோல் ஒக்டேன் 92: ரூ.348
பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 375
ஒட்டோ டீசல்: ரூ.306
சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) – ரூ.358
மண்ணெண்ணெய் : ரூ.226
LIOC நிறுவனமும் குறித்த விலைத் திருத்தத்தை அமுல்படுத்துவதாக வழக்கம் போன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த ஜூலை 01 முதல், பெற்றோல் 92 ரூ.328; பெற்றோல் 95 ரூ.365; டீசல் ரூ.308; சுப்பர் டீசல் ரூ.346; மண்ணெய் ரூ. 236 ஆக விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 01 முதல் பெற்றோல் 92 ரூ.318; பெற்றோல் 95 ரூ.385; டீசல் ரூ.310; சுப்பர் டீசல் ரூ.330; மண்ணெய் ரூ. 245 ஆக விலை திருத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.