தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உ/த பரீட்சைகள் தொடர்பில் விரைவில் தீர்மானம்

0 86

இந்த வருடத்தில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கான யோசனைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைகளை அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு முன்மொழிவை சமர்ப்பித்த , ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்னவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூன்றாம் மற்றும் முதலாம் பாடசாலை தவணைகள் இந்த வருடம் ஒக்டோபருக்கும் முதல் தவணை 2024 பெப்ரவரிக்கும் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் உயர்தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் ஜனவரி 22 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடத்தப்பட முடியுமென எம்.பி கவிரட்ன முன்மொழிந்தார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வருடம் மே மாதத்திற்குள் வெளியிடலாம் என்றும், அடுத்த வருட உயர்தரப் பரீட்சைகள் ஒக்டோபர் மாதம் வழக்கம்போல நடத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த யோசனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் அறிவிப்பார் எனவும் அமைச்சர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.