தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்பு உறுதி

0 72

உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அண்டை நாடான இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கு பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்த நிச்சயமற்ற நிலைக்கு முடிவுகட்டுவதாகவே இந்த அறிவிப்பு உள்ளது.

அரசியல் பதற்றம் காரணமாக இரு அணிகளும் கடந்த 2013 தொடக்கம் உலகக் கிண்ணம் மற்றும் பொதுவான இடங்களில் மாத்திரமே விளையாடி வருகின்றன.

“விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்பதை பாகிஸ்தான் தொடர்ச்சியாக பேணி வருகிறது” என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி இலங்கையின் கண்டியில் ஆசிய கிண்ண போட்டிக்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டபோதும் அட்டவணையில் மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் போட்டிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.