தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்பு

0 101

தம்புத்தேகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட கல்விஹார கெமுனுபுர அரச வனப்பகுதியில் நேற்று (30) காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

30 – 35 வயதுடைய ஆண் காட்டு யானை ஒன்றே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தம்புத்தேகம வனவிலங்கு அலுவலக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்துள்ள காட்டு யானையின் உடலில் துப்பாக்கிச் சூட்டு காயமோ மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதையோ காணக்கூடியதாகவில்லை. ஆனால், மல வாய் வழியாக இரத்தப்போக்கு செல்வதை அவதானிக்ககூடியதாகவுள்ளது. ஏதோ ஒரு நோயினால் அல்லது நச்சு உணவை உட்கொண்டதனால் இக்காட்டு யானை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வனவிலங்கு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

காட்டு யானை உயிரிழந்ததற்கான காரணத்தை உறுதியாக தெரிவிக்க முடியாதுள்ளதாகவும், பிரேத பரிசோதனையின் பின்னரே எதையும் உறுதியாக தெரிவிக்க முடியுமெனவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம வனவிலங்கு உத்தியோகத்தர்களும், பொலிசாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.