தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

0 108

இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளதுடன் அந்நியச் செலாவணியை அதிகரிக்க உதவியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இதனைத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.