தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை அசானியின் அசத்தல் பாடல்

0 96

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.

இந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்றில் இலங்கை சிறுமி அசானி கனகராஜ் பாடியுள்ளார்.

“கோல விழியம்மா ராஜ காளியம்மா..பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா” என்ற பாடலை பாடி ஒட்டுமொத்த அரங்கத்தினையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும், அசானியின் குரலை கேட்டு நடுவர்கள் வியந்து பாராட்டுவதும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

அதுமட்டும் இல்லை, உலக அளவில் கவனத்தினை ஈர்த்த பாடல் நிகழ்ச்சியான சரிகமப மேடையில் துளியும் மேக்கப் இல்லாமல் அசானி இருப்பது விமர்சணங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ‘மலையக குயில்’ அசானிக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்தும் “சரிகமப” மேடையில் பாட வேண்டும் என்ற கோரிக்கை உலக வாழ் தமிழ்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.