தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கு வரவுள்ள இந்தியாவின் மத்திய  பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங்

0 76

சீனாவின்  போர்க்கப்பலான ஹய் யாங் 24 ஹஓ இந்த மாத ஆரம்பத்தில் கொழும்பில் நங்கூரமிடப்பட்ட நிலையிலும் சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 எதிர்வரும்  ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள நிலையிலும் இந்தியாவின் மத்திய  பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

செப்டம்பர் 2, 3 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்காக  இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை துறைமுகங்களில் கடற்படை கப்பல்கள் மற்றும் உளவுக் கப்பல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ஆயுதப் படையினரின் திறனை விருத்தி செய்வதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும்,  இதற்கமைய இலங்கைக்கான 150 மில்லியன் டொலர் பாதுகாப்பு கடன் வசதியை இந்தியா நீடித்துள்ளதாகவும் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.