தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கு சூரிய காந்தி எண்ணெயை வழங்கிய ரஷ்யா

0 84

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் அவசர நடவடிக்கையாக ரஷ்ய கூட்டமைப்பு சூரியகாந்தி எண்ணெயை இலங்கையிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட 352 மெட்ரிக் தொன் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய சரக்கு இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகாரியனால்  இலங்கை மக்களிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வு நேற்று (12.09) வெயாங்கொட பொருளாதார நிலைய வளாகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.  

மனிதாபிமான உதவியாகவும், ரஷ்ய மக்களின் அன்பளிப்பாகவும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள எண்ணெய் சரக்கு, மேற்குலக சக்திகளின் புதிய காலனித்துவத்தின் பசி மற்றும் தடைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிக்கும் என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.