தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இராணுவ படகை சுட்டு வீழ்த்திய ரஷ்ய படை

0 74

அமெரிக்கா இராணுவ படகு ஒன்றை உக்ரைனுக்கு வழங்கியது. இந்த படகில் ஏராளமான உக்ரைன் வீரர்கள் கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவுக்கு கிழக்கே சென்று கொண்டு இருந்தனர். 

இந்த இராணுவ படகை ரஷ்ய படைகள் அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் வீரர்கள் ஏற்றிச் சென்ற படகை ரஷ்யாவின் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. 

ஆனால் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை. கருங்கடலில் உள்ள பாம்பு தீவு உக்ரைனின் ஒரு சிறிய புறக்காவல் நிலையமாகும்.

போருக்கு மத்தியில் அங்கிருந்து தானியங்களை அனுப்ப உக்ரைனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா கடந்த மாதம் வெளியேறியது. 

இந்த நிலையில் அந்த பகுதியில் உக்ரைன் வீரர்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.