தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இரண்டு பிரதான மதுபான ஆலைகளில் மது உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

0 82

நாட்டின் இரண்டு பிரதான மதுபான ஆலைகளில் மது உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உரிய காலத்தில் வரி செலுத்தத் தவறியதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் (W. M. Mendis & Co Ltd) மற்றும் ரந்தெனிகல (Randenigala Distileries Lanka (Pvt) Ltd) ஆகிய நிறுவனங்களில் மது உற்பத்தியே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் வரி செலுத்தத் தவறியதால், மேற்கூறிய மதுபான ஆலைகளின் உரிமங்களும், ஏனைய மூன்று மதுபான ஆலைகளின் உரிமங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.