தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இம்மாதத்தில் குறைந்தளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

0 96

நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் 198 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்குநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் அதி அவதானம் மிக்க பகுதிகளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 754 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருடத்தில் 65ஆயிரத்து 247 பேர் இதுவரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 38 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மேல் மாகாணத்திலேயே அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், (கொழும்பு – 13ஆயிரத்து 704, கம்பஹா – 13 ஆயிரத்து 500, களுத்துறை – 4247 ) மொத்த எண்ணிக்கையில் 48.2 வீதமாக (31 ஆயிரத்து 451 பேர்) பதிவாகியுள்ளது.

இதேவேளை மத்திய மாகாணத்தில் ஏழாயிரத்து 205 பேரும், வடமேல் மாகாணத்தில் ஐயாயிரத்து 391 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் ஐயாயிரத்து 427 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இம்மாதத்தில் குறைந்தளவான டெங்கு நோயாளர்களே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.