தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய வானிலை அறிக்கை

0 86

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை

மட்டக்களப்பு – பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

கொழும்பு – சிறிதளவில் மழை பெய்யும்

காலி – சிறிதளவில் மழை பெய்யும்

யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை

கண்டி – பிரதானமாக சீரான வானிலை

நுவரெலியா – பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

இரத்தினபுரி – சிறிதளவில் மழை பெய்யும்

திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலை

மன்னார் – பிரதானமாக சீரான வானிலை

Leave A Reply

Your email address will not be published.