தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று முதல் தாதியர் பயிற்சி நெறிக்கு 3500 விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன

0 99

தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த 1000 தாதியர்களை உடனடியாக ஆட்சேர்த்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பானது மிக விரைவில் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த 2000 க்கும் மேற்பட்டோர் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பணியமர்த்தப்படவுள்ளனர்.

தாதியர் பயிற்சி நெறிக்கு 3500 மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சு தற்போது மேற்கொண்டுள்ளது.

அதற்கேற்ப, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து, 15.09.2023 அதாவது இன்று முதல் 18.10.2023 வரை ஒன்லைன் (Online) மூலம் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

மேலதிக விபரங்களை இன்று வெளியிடப்படும் அரச வர்த்தமானி ஊடாகவும், சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஐப் பார்வையிடுவதன் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.