தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

0 84

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்  உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணி அளவில் ஆட்டம் தொடங்குகிறது. மேலும், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.