தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று டெல்லியில் ஆரம்பமாகும் G-20 உச்சி மாநாடு

0 88

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜG20 மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. 

இதில், பல உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர், இதனை முன்னிட்டு டெல்லி விழாக்கோலம் காட்சியளிக்கிறது.

இந்த மாநாட்டில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என  இதில் பங்கேற்கின்றனர்.

பிரதமர் அலுவலகங்கள் அறிக்கையின்படி, இன்று காலை 10 மணிக்கு மேல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்குகிறது. மதியம் 1மணிக்கு மேல் இடைவெளி விடப்படுகிறது. 

அதன் பின், அமர்வு தொடங்கும், இந்திய அரசு சார்பில், இன்று G20 தலைவர்களுக்கு விருந்து வழங்கப்பட உள்ளது. 

மாநாடு முடிந்த பின்பு, பின்னர், இரவு 7 மணிக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார்.

20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன

Leave A Reply

Your email address will not be published.