தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று சீனியை விநியோகிப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

0 85

வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தலைமையில் இன்று(16)
தட்டுப்பாடு இன்றி சீனியை விநியோகிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வர்த்தக அமைச்சில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து, சீனி இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒன்றரை மாதங்களுக்கு தேவையான சீனி கையிருப்பு மொத்த விற்பனையாளர்களிடம் காணப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்தார்.

நிர்ணய விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 1Kg சீனிக்கான வரி, இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்ததையடுத்து சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான விலை அதிகரிப்பை தடுக்கும் நடவடிக்கையாக விசேட வர்த்தமானியின் மூலம் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும் பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.