தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றுடன் சேவை நீடிப்புக் காலம் முடிவடைந்த சி.டி.விக்கிரமரத்ன

0 65

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக தேஷ்பந்து தென்னகோனை நியமிக்க அரசாங்கத்துக்குள் ஆலாசனைகள் இடம்பெற்றுள்ளன.

பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்று சனிக்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்னவுக்கு மூன்றாவது முறை வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இம்மாதம் ஆரம்பத்தில் நிறைவடைந்திருந்த நிலையில் அவருக்கு மேலும் 3 வாரங்களுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ்மா அதிபர் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியிருந்தது.

சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இதற்கு முன்னதாக இரண்டு முறை, தலா 03 மாதங்கள் என்ற அடிப்படையில் நீடிக்கப்பட்டது. இதனை அரசியலமைப்பு சபையும் அங்கீகரித்திருந்தது.

ஆனால், இறுதியாக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதல் பெறப்படவில்லை என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.