தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இசங்கவின் உடலுறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்த பெற்றோர்!

0 101

23 வயதான இசங்க ரணசிங்க என்ற இந்தப் பல்கலை மாணவன் ரயிலில் பயணித்தபோது தெமட்டகொட மற்றும் களனி நிலையங்களுக்கு இடையில் ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து வைத்தியர்கள் பரிசோதனை நடத்தியபோது மாணவன் மூளைச்சாவடைந்து விட்டதாக வைத்தியர்கள் மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

வைத்தியர்களின் இந்த அறிவித்தலையடுத்து, இசங்காவின் அனைத்து உறுப்புக்களையும்  தானமாக வழங்குவதற்கு இசங்காவின் பெற்றோர்கள் வைத்தியர்களிடம் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இசங்கவின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கணையம் மற்றும் கல்லீரல் ஆகிய உடல் உறுப்புக்கள் ஐந்து நோயாளர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, இலங்கை கண் மருத்துவச் சங்கம் இசங்கவின் கண்களைப் பெற்றுள்ள நிலையில், அவரது தோல் இரத்த நாளங்கள், முழங்கால் எலும்புகள் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளை நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.