தமிழ் ஓசை
தமிழ் ஓசை

லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழாவின் போது 85 பேர் அதிரடி கைது

0 75

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 

இது கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்காக ஒகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் இடம்பெறும். 

இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது.

நேற்று ஆரம்ப நாளான கண்கவர் உடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடினர். 

இந்த விழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை பலர் வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 

இதனையடுத்து போதைப்பொருள் வைத்திருந்த 85 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.