தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவி மூலம் தண்டவாளங்கள் இறக்குமதி

0 96

நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 6 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என்றார்.

இதனிடையே, கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

களனி மிட்டியாவத்தை ரயில் பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரிப்பதற்கான புனரமைப்பு பணிகளையும் இம்மாத முற்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவில் இருந்து 200 கோடி ரூபாய் பெறுமதியான 10 ஆயிரம் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலோர ரயில் பாதை உட்பட விரைவில் சீரமைக்க வேண்டிய மர்கங்களை சீரமைக்க அவை பயன்படுத்தப்படும் என்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தண்டவாளங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவி மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், தற்போது ரயில்வே திணைக்களத்துக்கு தண்டவாளங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Leave A Reply

Your email address will not be published.