தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரையிறுதியில் இலங்கை அணி

0 139

வளர்ந்துவரும் ஆசிய கிண்ணத் தொடரில் ஓமான் ஏ அணியை 217 ஓட்டங்களால் இலகுவாக வீழ்த்தியதன் மூலம் நாளை (21) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் ஆட இலங்கை அணி தகுதி பெற்றது.
ஆர். பிரேமதாச மைதானத்தில் கடந்த செவ்வாயன்று (18) கட்டாய வெற்றிக்காக ஓமான் அணியை குழு நிலை போட்டியில் எதிர்கொண்ட இலங்கை ஏ அணி முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நிலையில் 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.
மத்திய வரிசையில் பசிந்து சூரியபண்டார 75 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்றதோடு சஹன் ஆரச்சிகே 48 ஓட்டங்களை குவித்தார்.
தொடர்ந்து பதிலெடுத்தாட களமிறங்கிய ஓமான் ஏ அணியை 42 ஓட்டங்களுக்கே சுருட்ட இலங்கை அணியால் முடிந்தது.
ஓமான் அணியில் இருவர் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்துடனேயே ஆட்டமிழந்தனர். சாமிக்க கருணாரத்ன 2 ஓவர்கள் பந்துவீசி 3 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இலங்கை ஏ அணி ஆடும் அரையிறுதிப் போட்டி பீ. சரா ஓவல் மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.

Leave A Reply

Your email address will not be published.