தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரச உத்தியோகத்தர்களுக்கு நற்செய்தி!

0 116

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22,000 பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 66 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று ஏற்பட்ட அரச சேவையாளர்கள், பகுதியளவில் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் என காப்புறுதி நன்மைகளை பெறுவதற்காக 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுள் 22,000 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன, ஏனையோருக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலை அல்லது அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் மாத்திரம் அக்ரஹார காப்புறுதியை பெற தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.