தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அமெரிக்க வைத்தியசாலைகளில் சுகாதார சேவை முடக்கம்

0 96

அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னசி உட்பட 5 மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கணனிகளில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 900-க்கும் மேற்பட்ட கணனிகளில் இருந்து சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்ட வைத்தியசாலைகளில் சர்வர்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக அங்கு சுகாதார சேவைகள் பெரிதும் முடங்கியுள்ளன.

இது குறித்து சைபர் தாக்குதல் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த 9 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.