தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அத்தியவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் சதொச நிறுவனத்தின் அறிவிப்பு

0 73

நாளை (சனிக்கிழமை) முதல்  டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் 12 அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அதன்படி, சீனி கிலோ ஒன்று 60 ரூபாயாலும், வட்டானா பருப்பு கிலோ ஒன்று 40 ரூபாயாலும், கோதுமை மா கிலோ ஒன்று 12 ரூபாயாலும், 400 கிரேம் பால் மா 8 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட 425 கிரேம் டின் மீன் 55 ரூபாயாலும், இறக்குமதி செய்யப்பட்ட 155 கிரேம் டின் மீன் 10 ரூபாயாலும், 425 கிராம் உள்ளூர் டின் மீன் 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் உருளைக்கிழங்கு 15 ரூபாயாலும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும், சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்று 2 ரூபாயாலும், வெள்ளை நாட்டரிசி கிலோ ஒன்று 5 ரூபாவாலும், கடலை கிலோ ஒன்று 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.