தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அக்குரனை பகுதியில் வெடிப்பொருட்களுடன் 3 பேர் கைது

0 95

கண்டி – அக்குரனை பகுதியில் வெடிப்பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் சென்ற இருவர், அக்குரணை நகரில் வைத்து நபர் ஒருவருக்கு பொதியொன்றை வழங்கிய போது சந்தேகமடைந்த பொலிஸார் குறித்த பொதியை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, அந்த பொதியிலிருந்த எஸ்.ஜீ ரக 7 தோட்டாக்களும், ரி 56 துப்பாக்கி பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களும், 5 வெற்றுத் தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரனை, இறம்பொடை மற்றும் அட்டபாகை பகுதிகளைச் சேரந்த 39 முதல் 48 வயதுக்கிடைப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இன்றைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.