Developed by - Tamilosai
கன்னட சினிமாவை இப்போது இந்திய சினிமா ரசிகர்கள் உற்று நோக்க ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கொண்டாட வைத்துவிட்டது.
எந்த மொழி படமாக இருந்தாலும் சரி கதை நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே மக்கள் இப்போது பார்க்கிறார்கள்.
யஷ் இதுவரை 21 படங்கள் நடித்துள்ளார், ஆனால் இவ்வளவு பெரிய வரவேற்பு அவருக்கு KGF படங்கள் மூலமே கிடைத்துள்ளது.
இப்படம் கன்னடத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது, உலகம் முழுவதும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல்.
கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான இத்திரைப்படம் 50வது நாளை எட்டியுள்ளது.
50 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ. 1235 கோடி வரை வசூலித்துள்ளதாம்.