Developed by - Tamilosai
இந்தியன் ஒயில் கம்பனியிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் மற்றும் 40,000 மெற்றிக்தொன் பெற்றோல் தொகைளை கொள்வனவு செய்வது தொடர்பாக எரிசக்தி அமைச்சு குறித்த கம்பனியுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
அதற்கமைய, 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையை விநியோகிப்பதற்கு இந்தியன் ஒயில் கம்பனி உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த தொகையை கொள்வனவு செய்வதற்கான வருங்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.