தமிழ் ஓசை
தமிழ் ஓசை

IMF உடனான வரலாற்று ரீதியிலான நல்லுறவை கவனத்தில் கொள்ள வேண்டும்

0 168

சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கை ஒரு அங்கத்துவ நாடாக 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இணைந்து கொண்டது.

அன்று முதல் இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் பரஸ்பர நல்லுறவு அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன. வரலாற்று ரீதியிலான நல்லுறவை இத்தருணத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியை பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றதா? என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,சர்வதேச நாணய நிதியத்துடன் 16 தடவைகள் கொடுக்கல் வாங்கல்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தலைமையில் அதாவது யுத்த காலத்தில் 2.5 பில்லியன் டொலரை பெற்றிருந்தோம். இருப்பினும் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இதுவரையில் அரசாங்கம் எந்தவித பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியத்தை எம்முடன் தொடர்பில்லாத அமைப்பு என்று கூறமுடியாது என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.