Developed by - Tamilosai
சர்வதேச நாணய நிதியத்தின் நிதித் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர் கடனை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் இலங்கை இன்னமும் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை தமது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வரை, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் சமகால நிதியியல் தொடர்பான செயற்பாடுகள் ஆராய்வதற்கு அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் நாட்கள் மிகவும் மோசமானவையாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.