தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ATM நிதி மோசடி : 22 வயது இளைஞர் கைது…!

0 25

குருநாகல் பகுதியில் தானியக்க இயந்திர (ATM) வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களின் ATM இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொண்டு, நிதி மோசடியில் ஈடுபட்ட 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குருநாகல் நகரத்தில் அமைந்துள்ள வங்கிகளின் ATM இயந்திரங்களுக்கு அருகில் காத்திருந்து பணத்தை வைப்பிலிட வரும் நபர்களை ஏமாற்றி ஏ.டி.எம் அட்டையின் இரகசிய இலக்கத்தை சந்தேகநபர் பெற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர் வேறு அட்டை மூலம் ஏ.டி.எம் அட்டையை மாற்றி திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டிகாபால பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.