பிச்சைக்காரன் மீது பெற்றோல் ஊற்றி கொளுத்தியவர் கைது

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த அந்த பிச்சைக்காரன், அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டீரா இல்லையா? குளிக்காவிட்டால் தீ வைப்பேன்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார். அதேபோல, ஞாயிற்றுக்கிழமை (29) இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்திவிட்டார்.

விபரீதத்தை கண்ட அங்கிருந்தவர்கள், பிச்சைக்காரனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர் திங்கட்கிழமை (30) காலை மரணமடைந்தார்.

64 வயதான தர்மதாஸ என்பவரே மரணமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கைகைது
Comments (0)
Add Comment