பணவீக்கம் 4.6 சதவீதமாக குறைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட  ஒட்டுமொத்த பணவீக்கம் ஜூலையில் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 10.8 சதவீதமாக காணப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்கம் ஜூலையில் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக திணைக்களம் தெரிவிக்கிறது.

ஜூன் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 2  -2.5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், ஜூன் மாதத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 18.3 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் 73.3 சதவீதமாக உயர்ந்ததுடன், உணவுப் பணவீக்கம் 85.8 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.

எவ்வாறாயினும், அரசாங்கமும் மத்திய வங்கியும் எடுத்த கொள்கை முடிவுகளைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களில் பணவீக்கம் கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைபணவீக்கம்
Comments (0)
Add Comment