நாளை விசேட உரை ஆற்றவுள்ள ஜனாதிபதி

தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையும் பட்சத்தில் எதிர்வரும் முதலாவது தேசிய தேர்தலை புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  

ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவை நியமித்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன், தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (8) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.

புதிய முறைமை தொடர்பான வரைபை ஆறு மாத குறுகிய காலத்திற்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இலங்கைரணில் விக்ரமசிங்க
Comments (0)
Add Comment