கடன் பெறும் எல்லையை 13,979 பில்லியனாக அதிகரிக்க உத்தேசம்

கடன் பெறும் எல்லையை 4,979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று புதன்கிழமை (9) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இன்றைய தினம் பந்தய,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பனவும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அதனையடுத்து பிற்பகல் 05.00 மணிக்கு தனிநபர் பிரேரணையான இலங்கை வரி விதிப்பு நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.அதன் பின்னர் பிற்பகல் 05.30 மணி வரை எதிர்க்கட்சியால் கொண்டு வரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது

இலங்கைபாராளுமன்றம்
Comments (0)
Add Comment