அதிகரித்த டெங்கு காய்ச்சல் மரணங்கள்

இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 68,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 32,939 ஆக காணப்படுகின்றது. 

கொழும்பு மாவட்டத்தில் 14,527 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 14,034 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 04,378 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதனிடையே, டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய அச்சுறுத்தல் காணப்படும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில், இந்த மாத இறுதியில் விசேட பூச்சியியல் ஆய்வொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

இலங்கைடெங்கு காய்ச்சல் மரணங்கள்
Comments (0)
Add Comment