Developed by - Tamilosai
கடந்த 09 ஆம் திகதி காலி முகத்திடலில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு உரிய ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்காக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றத்தினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து இதுவரையான காலப்பகுதியில் 1591 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 813 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.