தமிழ் ஓசை
தமிழ் ஓசை

90s கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த செல்போன்! விலை என்ன?

0 235

செல்போன் அறிமுகமான ஆரம்பத்தில் மிகவும் பிரபலமான 6310 மொடல் செல்போனை நோக்கியா நிறுவனம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டே 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்த இந்த செல்போன் மீண்டும் விலைக்கு வந்துள்ளது.

2001ஆம் ஆண்டு வெளியான இந்த செல்போனில் உள்ள ஸ்னேக் கேமில் வயது வித்தியாசமின்றி அனைவரும் மூழ்கி கிடந்தனர்.

உறுதியான தன்மையால் செங்கல்கட்டி என கிண்டலடிக்கப்பட்ட இந்த செல்போன், தற்போது, MP3 Player, FM Radio, மேம்படுத்தப்பட்ட Display என பல்வேறு அம்சங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் 4000 ரூபாய் வரை விற்கப்படும் இந்த செல்போன் மீண்டும் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பெரிய வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.