Developed by - Tamilosai
8,000 மெற்றிக் தொன் எரிபொருளை மின்சார சபைக்குப் பெற்றுக் கொடுக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானம்
8,000 மெற்றிக் தொன் எரிபொருளை மின்சார சபைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக, கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் டொலர் பெற்றுக்கொடுக்கப்பட்டு நேற்று முன் தினம் 37,300 மெற்றிக்தொன் டீசல் கப்பலிலிருந்து இறக்கப்படடுள்ளதை அடுத்து அதனை நாடு முழுவதும் விநியோகிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், மின்சார சபைக்குத் தேவையான 8,000 மெற்றிக்தொன் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
அதேவேளை, நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை சுமுகமாக்குமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.