Developed by - Tamilosai
ஜே.வி.பியின் வாக்கு வங்கி 75 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாட்டு மக்கள் இன்று தேசிய மக்கள் சக்தி பக்கமே நிற்கின்றனர் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜே.வி.பியின் வாக்குவங்கி என்பது வெறும் 3 வீதம் அல்ல. அந்த எண்ணிக்கை தற்போது 75 வீதமாக அதிகரித்துள்ளது. பிரதான கட்சிகளின் ஆதரவாளர்களும், மக்களும் எம்முடனேயே இருக்கின்றனர். அதனால்தான் ஜே.வி.பியின் எழுச்சியை தடுப்பதற்கு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஓர் அங்கமாகவே முட்டைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள்மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது. முடிந்தால் அரசியல் கொள்கை அடிப்படையில் மோதுமாறு சவால் விடுக்கின்றேன்.