Developed by - Tamilosai
இன்று (05) காலை கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி தெற்குப் பகுதியைச் சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த முதியவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், உறவினர்கள் அவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த முதியவரது சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.