Developed by - Tamilosai
கனடாவை சேர்ந்த 70 வயது பெண்ணை 35 வயதான பாகிஸ்தான் இளைஞர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அது குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் குஜ்ராத்தை சேர்ந்தவர் 35 வயதான நஹீம் ஷாசத்.
இவருக்கும் கனடாவை சேர்ந்த 70 வயது பெண்ணான மேரி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.
இதையடுத்து நஹீமிடம் தனது காதலை மேரி வெளிப்படுத்த அவரும் ஏற்று கொண்டார். தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது
நஹீம் – மேரி இடையே உள்ள அதிக வயது வித்தியாசம் விமர்சனத்தை கிளப்பியது.
விசா கிடைப்பதில் சிக்கல் நீடித்ததால் நஹீமால் கனடாவுக்கு சென்று மனைவியுடன் சேர்ந்து வாழ முடியவில்லை.
மேரி அண்மையில் பாகிஸ்தானுக்கு வந்து கணவரை சந்தித்துள்ளார்.
தொடர்ந்து விசா பெறும் முயற்சியில் இறங்கியுள்ள நஹீம் கூறுகையில், மேரியை சந்திக்கும் முன்னர் நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தேன்.
அவர் எனக்கு உணர்வுபூர்வமாக உதவியதோடு, என் பண பிரச்சனைக்கும் உதவினார். நான் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மேரியை மணக்கவில்லை.
எங்களின் வயது வித்தியாசம் பற்றி நான் கவலைப்படவில்லை, என் வாழ்வின் மிக முக்கியமான நபர் என் மனைவி தான் என கூறியுள்ளார்.