Developed by - Tamilosai
வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிக்கையில், தற்போது கையிருப்பிலுள்ள அரிசி எதிர்வரும் 7 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது எனவும் பருப்பு மற்றும் சீனிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அரிசி இறக்குமதி தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.