Developed by - Tamilosai
7 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை தனது உடலில் மறைத்து வைத்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய துப்புரவு செய்யும் பிரிவில் கடமையாற்றும் 25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞனிடம் இருந்து 4,848 கிராம் நிறையுடைய 48 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தங்க பிஸ்கட்டுக்கள் சுமார 7 கோடி ரூபா பெறுமதியுடையவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த தங்க பிஸ்கட் தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.