தமிழ் ஓசை
தமிழ் ஓசை

60,000 காணி உறுதிகள் வழங்கல் ஒரு பாரிய வெற்றியாகும்: அரசாங்கம்

0 76

 ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் இலக்கை அடைய முடியாவிட்டாலும் இதுவரை எம்மால் 60 ஆயிரம் காணி உறுதிகள் வழங்க முடிந்திருப்பது ஒரு பாரிய வெற்றியாகும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின்கீழ் வீட்டுக்கு வீடு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை   மட்டக்களப்பு களுதாவளை விச்சுக்காலை வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:

‘வருடக்கணக்காக தங்களுக்குப் பெற்றுக் கொள்ள முடியாமலிருந்த காணி உறுதிகள் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை இப்பொழுது ஆரம்பித்து அதனை வழங்கி வருகின்றோம்.

எமது நாட்டிலுள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் உட்பட சகல சமூகத்தவர்களுக்கும் உரிய பிரதேசங்களுக்குச் சென்று நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்யும் விதமாக அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுக்கும்படி காணி அமைச்சை ஜனாதிபதி ஒப்படைத்த பின்பு அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கமைய   திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மக்களுக்கும் காணிச் சீர்திருத்த  ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருகின்றோம் என அவர் தெரிவித்தார். 

Leave A Reply

Your email address will not be published.