Developed by - Tamilosai
” நீங்கள் நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னரே, நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்று மக்கள் கருதுகின்றனர். எனவே, ஆறு மாதங்களுக்காகவது அரசியலில் இருந்து ஒதுங்கி இருங்கள்.”
இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு, ஆலோசனை வழங்கியுள்ளார் அபயராம விகாரையின் விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பலரும் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். குறிப்பாக நிதி அமைச்சராக பஸில் ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னரே நிலைமை மோசமடைந்துவிட்டது என மக்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இது சாபமோ என்னவோ தெரியவில்லை, மக்கள் கருதுவது உண்மையெனில், அரசியலில் இருந்து ஆறு மாதங்களாவது நிதி அமைச்சர் ஒதுங்கி இருக்க வேண்டும்.
நாடு மோசமான கட்டத்தில் உள்ளது. அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ” – என்றார்.