தமிழ் ஓசை
தமிழ் ஓசை

5,000 ரூபா போலி நாணயத்தாளை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது

0 31

தெல்லிப்பழை மற்றும் இளவாலை காவல்துறை பிரிவுகளில் உள்ள கடைகளுக்கு அண்மையில் சென்ற ஒருவர் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களை வழங்கி பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

போலி நாணயத்தாள்கள் என அறிந்த கடைக்காரர்கள் இருவர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாடுகள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.