Developed by - Tamilosai
2022 பாதீட்டின் ஊடாக பெருந்தோட்ட மக்கள் மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
”நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சரத் பொன்சேகா, பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இன்று ஒரு வீட்டை அமைக்க வேண்டுமானால், ஒன்றரை லட்சமாவது தேவை.
எனினும் அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 மில்லியன் ரூபாவில் ஒரு லட்சம் வீடுகளை அமைக்க வேண்டுமானால், ஒரு வீட்டுக்கு 5 ஆயிரம் ரூபாவையே செலவிடமுடியும்.
தற்போதைய நிலையில் இந்த 5 ஆயிரம் ரூபாவில் மலசலக்கூடம் ஒன்றைக்கூட அமைக்க முடியாது என்று சரத் பொன்சேகா தொிவித்தார்.
தேயிலைக்கொழுந்து தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் தோற்றப்பாடு இல்லை.
எனினும் தமிழ் மக்கள் மத்தியில் தோட்டத்தொழிலாளர்களின் பெறுமதி உணரப்படுகிறது.
எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களையே பாதீட்டில் காணமுடிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.