தமிழ் ஓசை
தமிழ் ஓசை

5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

0 99

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை, காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு 147 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 145 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கிளிநொச்சி, திருகோணமலை, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு 144 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர புத்தளம், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, பொலனறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 143 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.